கார்டன் ஆராய்ச்சி மாநாடுகள்
கார்டன் ஆராய்ச்சி மாநாடுகள் (Gordon Research Conferences) என்பவை மதிப்புமிக்க அனைத்துலக அறிவியல் மாநாடுகளாகும்.வணிக நோக்கமற்ற இதேபெயரிலான நிறுவனம் இம்மாநாடுகளை நடத்துகிறது. உயிரியல், வேதியியல், இயற்பியல், மற்றும் அவற்றின் தொடர்புடைய தொழில்நுட்பங்கள் ஆகிய தலைப்புகளில் அதிகபட்ச ஆய்வுகள் மாநாட்டில் அலசப்படுகின்றன. இந்த மாநாடுகள் 1931 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன, மேலும் ஆண்டு ஒன்றுக்கு கிட்டத்தட்ட 200 மாநாடுகள் வரை நடைபெறுமளவிற்கு விரிவடைந்துள்ளன. மாநாடு நடைபெறும் இடங்கள் கண்ணியமாகவும், பெரும்பாலும் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களாகவும், ஒரு முறைசாரா சமூகச்சூழலை ஊக்குவிக்கும் இடங்களாகவும் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. சுதந்திரமான விவாதத்தை ஊக்குவிப்பதற்காக பங்களிப்புகள் இங்கு பதிவுசெய்யப்படுவதில்லை, பெரும்பாலும் வெளியிடப்படாத ஆராய்ச்சிகளாகவே இருக்கும்.. விஞ்ஞான கல்வியையும் உள்ளடக்கி 1991 இல் மாநாடுகள் விரிவாக்கப்பட்டன[1]. மாநாட்டுத் தலைப்புகள் முறையாக அறிவியல் இதழ்களில் பிரசுரம் செய்யப்பட்டன. 2015[2], 2010[3][4], 2009[5][6], 2008, 2007[7][8][9][10] மற்றும் 2006[11][12] and 2006.[13][14] [15]
வரலாறு
[தொகு]1920 களின் பிற்பகுதியில் யான்சு ஆப்கின்சு பல்கலைக்கழகத்தின் வேதியியல் பிரிவில் நடைபெற்ற கோடை அமர்வுகள் கார்டன் மாநாட்டிற்கு முன்னோடியாக இருந்தது. 1931 ஆம் ஆண்டில் இது வெளிநாட்டு பங்கேற்பாளர்களால் கலந்துரையாடப்பட்ட பட்டதாரிகளின் கருத்தரங்கில் இது உருவானது. யான்சு ஆப்கின்சு பல்கலைக்கழகத்தில் இருந்தபோது பேராசிரியர் நீல் கோர்டன் அவர்களால் இம்மாநாடுகள் தொடங்கப்பட்டன[16] .
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "First Gordon Research Conference on Science Education". J. Chem. Educ. 68 (11): 901. 1991. doi:10.1021/ed068p901. Bibcode: 1991JChEd..68..901..
- ↑ "Gordon Research Conferences". Science 347: 888–912. 2015. doi:10.1126/science.347.6224.888.
- ↑ "Gordon Research Conferences". Science 327 (5966): 708–734. 2010. doi:10.1126/science.327.5966.708. Bibcode: 2010Sci...327..708..
- ↑ "Gordon Research Conferences". Science 329 (5997): 1362–1372. 2010. doi:10.1126/science.329.5997.1362. Bibcode: 2010Sci...329.1362..
- ↑ "Gordon Research Conferences". Science 323 (5917): 1084–1109. 2009. doi:10.1126/science.323.5917.1084.
- ↑ "Gordon Research Conferences". Science 325 (5945): 1276–1288. 2009. doi:10.1126/science.325_1276.
- ↑ "Gordon Research Conferences". Science 319 (5863): 637–661. 2008. doi:10.1126/science.319.5863.637.
- ↑ "Gordon Research Conferences". Science 319 (5868): 1310. 2008. doi:10.1126/science.319.5868.1310.
- ↑ "Gordon Research Conferences". Science 321 (5894): 1366–1373. 2008. doi:10.1126/science.321.5894.1366.
- ↑ "Gordon Research Conferences". Science 322 (5903): 974. 2008. doi:10.1126/science.322.5903.974.
- ↑ "Gordon Research Conferences". Science 315 (5812): 671–693. 2007. doi:10.1126/science.315.5812.671.
- ↑ "Gordon Research Conferences". Science 317 (5843): 1407–1415. 2007. doi:10.1126/science.317.5843.1407.
- ↑ "Gordon Research Conferences". Science 311 (5761): 676–699. 2006. doi:10.1126/science.311.5761.676.
- ↑ "Gordon Research Conferences". Science 314 (5797): 314–322. 2006. doi:10.1126/science.314.5797.314.
- ↑ "Gordon Research Conferences". Science 314 (5803): 1315–1316. 2006. doi:10.1126/science.314.5803.1315.
- ↑ "Journal History: Guiding the Journal of Chemical Education". Journal of Chemical Education 75: 1373–1380. 1998. doi:10.1021/ed075p1373. https://archive.org/details/sim_journal-of-chemical-education_1998-11_75_11/page/1373.